சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஆக்ட்ரஸ் ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படத்தை அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஆரம்பத்தில் செப்டம்பர் 24-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்தி ட்ரைலரிலும் அதே போல அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ் ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல், விரைவில் வருகிறது என்று மட்டும் குறிப்பிட்டிருந்தனர்.

இப்போது கிராபிக்ஸ் பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது எந்திரன் டீம். செப்டம்பர் 24-ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், அக்டோபர் முதல் தேதி உலகம் முழுக்க எந்திரன் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி ரோபோவை மிகப் பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இந்தியில் வெளியாகின்றன. இந்தி ரோபோவுக்கு போட்டியாக வேறு எந்த இந்திப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.